ஹமில்டனில் காணாமல் போன 3 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்!
கனடாவின் ஹமில்டனில் காணாமல் போன மூன்று வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஹமில்டனின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் குறித்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஸாராஹ ஒஸ்மான் என்ற மூன்று வயது சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிரின்புருக் பாதுகாக்கப்பட்ட பூங்கா வலயத்தில் இறுதியாக இந்தச் சிறுமியை கண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுமியைக் காணவில்லை என தகவல் வெளியிடப்பட்டது. எவ்வாறெனினும் அறிவிப்பு வெளியிடப்பட்டு இரண்டு மணித்தியாலங்களில் சிறுமி மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
எந்த இடத்தில் சிறுமி மீட்கப்பட்டார் என்பது பற்றியோ உயிரிழந்தமைக்கான காரணங்கள் பற்றியோ அதிகாரபூர்வ அறிவிப்புக்கள் வெளியிடப்படவில்லை.
சிறுமியின் மரணம் தொடர்பில் அவரது குடும்பத்தினருக்கு பொலிஸார் இரங்கல் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.