கனடாவில் மாயமான இளம்பெண் தொடர்பில் பொலிசார் வெளியிட்ட மகிழ்ச்சித்தகவல்!
கனடாவில் கடந்த 21ஆம் திகதி முதல் மாயமான இளம்பெண் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். Quesnel நகரை சேர்ந்தவர் அலிஷா நார்த். 32 வயதான இவர் கடந்த மாதம் 21ஆம் திகதியில் இருந்து என்ன ஆனார் என்பது தெரியாமல் இருந்தது.
ஆனால் அலிஷா காணாமல் போனதாக கடந்த செவ்வாய்க்கிழமை தான் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து பொலிசார் அலிஷாவை தேடி வந்தனர். 5 அடி 9 அங்குலம் உயரம் கொண்ட அவர் 57 கிலோ எடை கொண்டவர் என பொலிசார் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவரை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவ வேண்டும் என்றும் தகவல் தெரிந்தவர்கள் தங்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் பொலிசார் கூறியிருந்தனர்.
இந்நிலையில் காணாமல் போன அலிஷா பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அலிஷா காணாமல் போன வழக்கு மகிழ்ச்சியான முடிவை எட்டியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.