சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை மீண்டும் உயர்வு
அமெரிக்காவிற்கும் ஈரானுக்குமிடையே நிலவி வரும் போர்ப் பதற்றம் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது.
கடந்த ஆறு வாரக் காலத்தில் பதிவான மிக உயர்ந்த விலை மதிப்புகளைக் குறிக்கும் வகையில், உலக சந்தையின் பிரதான ப்ரென்ட் மசகு எண்ணெய், ஒரு பீப்பாயின் விலை 98 அமெரிக்க டொலர் எல்லையைத் தாண்டியுள்ளதுடன், WTIமசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலையும் 90 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் பதற்றம் காரணமாக, எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், நேரடி விளைவாக, மசகு எண்ணெய் விலையேற்றம் ஆசிய சந்தைகளிலும் கடுமையான பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.