ட்ரம்பால் சரிந்த உலக வர்த்தகம் ; அபாய கட்டத்தில் பல நாடுகள்
அமெரிக்காவின் வரிகள் நடவடிக்கை காரணமாக, வர்த்தக முறைகள் மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பில் குறிப்பிடத்தக்க நீண்டகால மாற்றங்களுடன், உலகளாவிய வர்த்தகம் மூன்று சதவீதம் சரியக்கூடும் என்று சர்வதேச வர்த்தக மையத்தின் செயல் இயக்குனர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பரஸ்பர வரி விதித்து உள்ளார்.
பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி
இது சர்வதேச அளவில் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக பல நாடுகளின் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை எதிர்கொண்டன. டிரம்பின் இந்த நடவடிக்கை சர்வதேச வர்த்தக போருக்கு வித்திட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் இந்த பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள சர்வதேச வர்த்தக மையத்தின் செயல் இயக்குனரான பமீலா கோக் ஹேமில்டன் ஜெனீவா, "அமெரிக்காவின் பரஸ்பர வரி நடவடிக்கையால் வர்த்தக முறைகள் மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பில் குறிப்பிடத்தக்க நீண்டகால மாற்றங்களுடன், உலகளாவிய வர்த்தகம் 3 சதவீதம் அளவுக்கு சரியக்கூடும்.
பரஸ்பர வரி விதிப்பால் சீனா, மெக்சிகோ, தாய்லாந்து மற்றும் தெற்கு ஆப்பிரிக்க நாடுகள் அதிகம் பாதிக்கப்படும். அதைப்போல அமெரிக்காவும் பாதிப்பை எதிர்கொள்ளும்" என்று அவர் கூறினார்.