அமெரிக்கா செல்லவேண்டும் எனில் தங்கம் மற்றும் பிளாட்டினம் விசா
அமெரிக்கா செல்வோரிற்கு தங்கம் மற்றும் பிளாட்டினம் விசாக்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிமுகப்படுத்தியுள்ளார்.
குறித்த பிளாட்டினம் விசா1 மில்லியன் டொலர் முதல் 5 மில்லியன் டொலர் வரை மதிப்பு மிக்கது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியர்கள் பெரும் அதிர்ச்சி
இதன்மூலம், பணக்கார வெளிநாட்டினருக்கு வதிவிட சலுகைகள் மற்றும் குடியுரிமை பாதைகளை வழங்கி, 100 பில்லியன் டொலருக்கும் அதிகமான வருவாயை எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பணக்கார தனிநபர்களையும், வணிகங்களையும் ஈர்ப்பதற்காக, அதிக முதலீடுகளுக்கு ஈடாக விரைவான அமெரிக்க வதிவிட செயல்முறையை வழங்குவதன் மூலம், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'தங்க அட்டை' விசா திட்டத்தைத் ஆரம்பித்ததாக கூறப்படுகின்றது.
மேலும் , நிர்வாக உத்தரவின் பேரில் ட்ரம்ப் கையெழுத்திட்ட, வெளிநாட்டு வருமானத்திற்கு வரி விதிக்கப்படாமல் ஆண்டுதோறும் 270 நாட்கள் வரை அமெரிக்காவில் தங்க அனுமதிக்கும் பிளாட்டினம் விசா அட்டையும் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோல்ட் கார்டு' திட்டத்துடன், H-1B விசாவுக்கான கட்டணத்தையும் ஒரு லட்சம் டாலராக உயர்த்துவதற்கான நிர்வாக உத்தரவிலும் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
இந்த அதிரடி நடவடிக்கை, அமெரிக்காவில் பணியாற்ற விரும்பும் இந்திய தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.