இன்று ஒரே நாளில் அதிரடியாக அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!
கடந்த 2 நாட்களாக இறங்கு முகமாக இருந்த தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.608 அதிகரித்துள்ளது.
மாதத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைச் செய்துள்ளது.
தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பினர்.
பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர்.
இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்தது.
இதற்கிடையே 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டது.
இதன் பிறகு தங்கம் விலை ஏற்றம் – இறக்கமாகவே உள்ளது.
இந்நிலையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. ஆனால் இன்றுஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.608 உயர்ந்து ரூ.33,904க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.76 உயர்ந்து ரூ.4,238க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் கடந்த சில நாட்களாக சரிந்து வந்த தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.608 உயர்ந்துள்ளது. இதனால் இன்று மாலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் ரூ.33,904-க்கு விற்பனையாகிறது.
தங்கத்திற்கு போடப்பட்ட இறக்குமதி வரிகுறைந்து மற்றும் சர்வதேச காரணிகள் காரணமாக தங்கம் விலை 37000த்தில் 35 ஆயிரம் அளவிற்கு கடந்த இரண்டு மாதங்களில் குறைந்தது.
இதனிடையே கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை 33 ஆயிரத்து 500 முதல் 34 ஆயிரத்திற்குள் தான் தங்கம் விற்பனையாகி வந்தது.
ஆனால் சென்னையில் நேற்று கிராமுக்கு ரூ40 குறைந்து ஒரு கிராம் ரூ.4162க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.33296க்கும் விற்கப்பட்டது.
இன்று அதிரடியாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.608 உயர்ந்துள்ளது. இதனால் இன்று மாலை நிலவரப்படிஒரு சவரன் தங்கம் ரூ.33,904-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை ஒரே நாளில் அதிரடியாகஉயர்ந்திருப்பது தங்கம் வாங்குவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. சர்வதேச அளவில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
வெள்ளி விலையும் இன்று மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ பார் வெள்ளி, 67600.ரூபாய்க்கு விற்பனையானது.
ஆனால் இன்று 1100 ரூபாய் உயர்ந்து ரூ.68700க்கு விற்பனையாகிறது ஒரு கிராம் வெள்ளி ரூ.68.70க்கு சென்னையில் விற்பனையாகிறது.