அதிக கோல் அடித்து வரலாறு படைத்த பிரான்ஸ் வீரர்; தங்கப் பாதணி யாருக்கு!
உலகக் கிண்ண கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை பிரான்ஸ் அணியின் கைலியன் எம்பாப்பே படைத்துள்ளார்.
மியாமி நகரில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில், தனது 22வது கால்பந்து கோலை அடித்து எம்பாப்பே புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 6-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி, கால்பந்து உலகக் கிண்ணத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
2026 உலகக் கிண்ணத்தின் தங்கப் பாதணி (Golden Boot) போட்டியில், எம்பாப்பே இதுவரை 10 கோல்களை அடித்து, பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
அவரைத் தொடர்ந்து லயோனல் மெஸ்ஸி 8 கோல்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
அதேநேரம் உலகக் கிண்ண கால்பந்து வரலாற்றில் லயோனல் மெஸ்ஸி இதுவரை 21 கோல்களை அடித்துள்ளார்.
அதேவேளை ஸ்பெயினுக்கு எதிரான இறுதிப்போட்டியில் மெஸ்ஸி விளையாடும்போது, இந்த தங்கப் பாதணி (Golden Boot) விருதுக்கான போட்டி மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.