விமானம் ரத்து; அடுத்த விமானத்திற்காக காத்து கொண்டிருந்த பெண்ணுக்கு அடித்த அதிஷ்டம்!
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணம் Missouri பகுதியை சேர்ந்த Angela Caravella (51) பெண்ணொருவர் தன்னுடைய வீட்டிற்கு செல்வதற்காக விமான நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தார்.
அதன்போது விமானம் ரத்து என்ற அறிவிப்பு வந்ததால் அடுத்த விமானத்திற்கு காத்துக்கொண்டிருக்கும் பொழுதில் அருகில் இருந்த சூப்பர் மார்கெட்டிற்கு சென்று லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார்.
இந்நிலையில் தற்போது அவர் வாங்கிய அந்த லாட்டரி சீட்டுக்கு ஒரு மில்லியன் டாலர்(19கோடிக்கு மேல்) பரிசு கிடைத்துள்ளது.
இதுகுறித்து அந்தப் பெண் கூறுகையில்,
அடுத்த விமானத்திற்கு காத்துக்கொண்டிருக்கும் வேளையில் பொழுது போகவில்லை என்பதற்காக ஷாப்பிங் செய்யத் சென்றபோது லாட்டரி வாங்கினேன். அதில் இவ்வளவு மிகப்பெரிய பரிசு கிடைக்கும் என நான் நினைக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.