அவுஸ்திரேலியாவில் ஊழியர்களுக்கு இன்பத்தகவல்!
அவுஸ்திரேலியாவின் பணவீக்கத்திற்கு ஏற்ப கடந்த மாதம் மத்திய அரசு முன்வைத்த முறையான சமர்ப்பிப்பைத் தொடர்ந்து, குறைந்தபட்ச ஊதியம் 5.2 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Australian Fair Work Commission இதனை தெரிவித்துள்ளது. ஜூலை முதலாம் திகதி முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறைந்தபட்ச ஊதியம் வாரத்திற்கு $812.60 அல்லது ஒரு மணி நேரத்திற்கு $21.38 ஆக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய அதிகரிப்பு தொடர்பில் The Australian Fair Work Commission தலைவர் இயன் ரோஸ் கூறுகையில், இந்த அளவு அதிகரிப்பு குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களின் ஊதியத்தின் உண்மையான மதிப்பைப் பாதுகாக்கும் என தெரிவித்தார்.