ஜெர்மனியில் பணியாற்ற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!
ஜெர்மனி இந்த வார இறுதியில் அதிக வெளிநாட்டு தொழிலாளர்களை ஈர்க்க வேண்டும் என சான்ஸ்லர் ஓலாஃப் ஸ்கோல்ஸ்(Olaf Scholes) தெரிவித்துள்ளார்.
எதர்வரும் ஆண்டுகளில் தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் அதன் பொது ஓய்வூதிய அமைப்பில் ஏற்படும் நெருக்கடியைத் தவிர்க்க பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு வேலை செய்வதை எளிதாக்க வேண்டும் என அவர் கூறினார்.
ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய வெளிநாட்டு தொழிலாளர்களை ஈர்ப்பதில் அரசாங்கம் ஏற்கனவே கடுமையாக உழைத்து வருகிறதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெர்மன் அரசாங்கம் கடந்த மாதம் குடியேற்றச் சட்டத்தை சீர்திருத்துவதற்கான திட்டங்களை ஒப்புக்கொண்டது. ஏனெனில் பெர்லின் ஜெர்மனியின் வேலைச் சந்தையை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியில் இருந்து மிகவும் தேவைப்படும் தொழிலாளர்களுக்கு திறக்க முயல்கிறது.
2025 ஆம் ஆண்டு அதன் ஆணை முடிவதற்குள் அரசாங்கம் ஓய்வூதிய பங்களிப்புகளை கணிசமாக உயர்த்த வேண்டியதில்லை என்று ஷோல்ஸ் கூறினார்.
தொழிலாளர் தொகுப்பில் பெண்களின் பங்கு அதிகரிப்பதையும் அரசாங்கம் விரும்புகிறது என சான்ஸ்லர் வெளியிட்ட பேட்டியில் கூறினார்.
இந்த நேரத்தில், ஜெர்மனியில் 72.1% பெண்கள் பணிபுரிகின்றனர், இது ஸ்வீடனில் 85.3% ஆக உள்ளது.
உத்தியோகபூர்வ ஓய்வு பெறும் வயது வரை அதிகமான மக்கள் வேலை செய்ய உதவுவது முக்கியம் என்று ஸ்கோல்ஸ் கூறினார்.