கூகுளின் மெசேஜஸ் செயலியில் இப்படியொரு வசதியா? வரவுள்ள அப்டேட்!
தனது மெசேஜஸ் ஆப்-ஐ வாட்ஸ்அப், சிக்னல் போன்ற குறுந்தகவல் செயலிகளுக்கு போட்டியாக மாற்றும் பணிகளில் கூகுள் நிறுவனம் முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
கூகுளின் மெசேஜஸ் செயலியில் ஆர்.சி.எஸ். எனப்படும் ரிச் கம்யூனிகேஷன் சர்வீசஸ் வசதி இருக்கிறது.
மற்ற குறுந்தகவல் செயலிகளுடனான போட்டியை வலுப்படுத்தும் நோக்கில் கூகுள் நிறுவனம் மெசேஜஸ் செயலியில் புதிய வசதியை வழங்கி உள்ளது.
மெசேஜஸ் செயலியில் எமோஜி ரியாக்ஷன்ஸ் அம்சம், யூடியூப் காணொளிகளை, மெசேஜஸ் செயலியில் இருந்தபடி பார்க்கும் வசதி என ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இந்த வரிசையில் மெசேஜஸ் செயலியில் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கும் "வாய்ஸ் நோட்ஸ்" (Voice Notes) அம்சத்தில் புதிய வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது.
இந்த அம்சம் கொண்டு பயனர்கள் சிறிய வாய்ஸ் நோட்-ஐ ரெக்கார்டு செய்து அதனை மெசேஜஸ் ஆப் மூலம் மற்றவர்களுக்கு அனுப்ப முடியும்.
தற்போது வெளியாகி இருக்கும் புதிய அம்சம் கொண்டு பயனர்கள் வாய்ஸ் நோட் ரெக்கார்டு செய்யும் போது வெளிப்புற சத்தத்தை தவிர்க்க முடியும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அதன்படி கூகுள் மெசேஜஸ் செயலியின் வாய்ஸ் நோட் அம்சத்தில் நாய்ஸ் கேன்சலேஷன் (Noise Cancellation) வசதி சேர்க்கப்படுகிறது.
முதற்கட்டமாக இந்த வசதி கூகுள் மெசேஜஸ் செயலியின் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்காக செயலியில் நாய்ஸ் கேன்சலேஷன் பெயரில் பிரத்யேக பட்டன் வழங்கப்பட்டுள்ளது.
இதை பயன்படுத்தும் போது வாய்ஸ் நோட்-களில் வெளிப்புற சத்தம் எதுவும் பதிவாகாது. வாய்ஸ் நோட்-இல் வழங்கப்படும் புதிய நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம் தற்போது சோதனை கட்டத்திலேயே உள்ளது.
இந்த அம்சம் செயலியின் எதிர்கால அப்டேட்களில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.