சதி என்ற தலைப்பில் புத்தகத்தை வெளியிடும் கோட்டாபய ராஜபக்ஷ!
தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட காலத்தல் இருந்து, சில வெளிநாட்டு சக்திகள் மற்றும் உள்நாட்டு கட்சிகள் என்னை ஆட்சியிலிருந்து வெளியேற்றும் நோக்கத்தில் இருந்ததாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (06-03-2024) கோட்டாபய ராஜபக்ஷ அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் அவர் தெரிவித்தாவது,
"ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றுவதற்கான சதி" என்ற தலைப்பில் புத்தகத்தை வெளியிடுவதாகவும் அறிவித்தார்.
இந்த நாடு சுதந்திரமடைந்த முதல் 6 ஆண்டுகளில் ஒருபோதும் அனுபவித்திராத வகையில் இன்று வெளிநாட்டுத் தலையீடும், உள் அரசியலின் சூழ்ச்சியும் இலங்கையில் உள்ளதாக கோட்டாபய ராஜபக்ச கூறினார்.
தம்மை வெளியேற்றுவதற்கான அரசியல் பிரச்சாரம் இலங்கையின் அரசியலில் ஒரு புதிய அம்சத்தைக் கொண்டுவந்தது என்றும், சுதந்திரம் பெற்றதில் இருந்து தேர்தலுக்குப் பிறகு அமைதியான அதிகாரப் பரிமாற்றங்களை மட்டுமே இலங்கை அனுபவித்து வந்ததாகவும் அவர் கூறினார்.
எனவே, 2022 ஆம் ஆண்டு நிகழ்வுகள் இந்த நாட்டின் எதிர்காலத்திற்கு கடுமையான தாக்கங்கள் நிறைந்தவை என்று கோட்டாபய ராஜபக்ச கூறினார்.
மேலும், சர்வதேச ரீதியில் அனுசரணையளிக்கப்பட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கையின் முதல் அனுபவத்தை புத்தகம் விளக்குகிறது என்றார்.