சுவிட்சர்லாந்தின் ரயில்கள் தொடர்பில் அரசாங்கம் வெளியிட புதிய தகவல்!
சுவிட்சர்லாந்தில் இயங்கி வரும் சில ரயில்கள் பாதுகாப்பற்றவை என அரசாங்கத்தின் புதிய தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
நாட்டில் ஓர் நாளில் சேவையில் ஈடுபடுத்தப்படும் மொத்த ரயில்களில் குறைந்தபட்சம் மூன்று ரயில்கள் ஏதேனும் கோளாறுகளை சந்திப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தகவல்கள் சுவிட்சர்லாந்து பாதுகாப்பு விசாரணை சேவையினால் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த 2022ம் ஆண்டு பேர்னின் சூலிகோபென் பகுதியில் இரண்டு ரயில்கள் மோதுண்டு ஏற்பட்ட விபத்து தொடர்பிலும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் பயணம் செய்யும் ரயில்களில் நாள் தோறும் மூன்று ரயில்களின் பாதுகாப்பு கட்டமைப்பில் குறைபாடு காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.