கனடாவில், வீடற்றவர்களுக்காக அரசாங்கத்திற்கு கடிதம் எழுதிய வர்த்தகர்
கனடாவில் நகரமொன்றின் வீடற்றவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டுமென வர்த்தகர் ஒருவர் அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
கனடாவின் மொன்றியால் நகரைச் சேர்ந்த வர்த்தகரான பீற்றர் சராகீஸ் என்பவர் இவ்வாறு கடிதம் எழுதியுள்ளார்.
மொன்றியால் நகரில் வீடற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.
மாகாண அரசாங்கம், நகர நிர்வாகம் மற்றும் பொலிஸார் ஆகியோருக்கு அவர் இந்த கடிதத்தின் பிரதிகளை அனுப்பி வைத்துள்ளார்.
மொன்றியல் நகரில் சுமார் 6000 வீடற்றவர்கள் வீடுகளில் உறங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உரிய அதிகாரிகள் இந்தப் பிரச்சினை குறித்து தீர்வுத் திட்டங்களை முன்வைக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டு முதல் வீடற்றவர்களின் பிரச்சினை தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.