கனடாவில் இந்த மளிகை பொருட்களுக்கு விலை அதிரடியாக உயர்ந்துள்ளது தெரியுமா?
கனடாவில் மார்ச் மாதத்தில் இந்த மளிகை பொருட்களுக்கு விலை அதிரடியாக அதிகரித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
பணவீக்கம் என்பது நாடு முழுவதும் கட்டுக்குள் வரும் சூழல் உருவாகியுள்ளது. இருப்பினும் சில உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஏப்ரல் 18ம் திகதி வெளியான தரவுகளின் அடிப்படையில் பணவீக்கம் என்பது 4.3% என தெரியவந்துள்ளது. பிப்ரவரி மாதம் 5.2% என பணவீக்கம் பதிவாகியிருந்தது. இருப்பினும், கடந்த 6 மாதங்களுடன் ஒப்பிடுகையில் பணவீக்கம் என்பது மார்ச் மாதம் 1.7% அதிகரித்துள்ளதாகவே கூறப்படுகிறது.
மாவு, பழச்சாறுகள் மற்றும் ஆப்பிள்கள் போன்ற பொருட்களின் விலைகள் மார்ச் மாதத்தில் அதிகமாக இருந்தது, அதே சமயம் ஹாம், தக்காளி, கீரை போன்றவை இந்த ஆண்டு பிப்ரவரி முதல் மார்ச் வரை விலை குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் உண்ணக்கூடிய கொழுப்பு மற்றும் எண்ணெய் விலை 19.3% அதிகரித்துள்ளது. மட்டுமின்றி பிப்ரவரி- மார்ச் மாதங்களில் 1.1% விலை அதிகரித்துள்ளது.
ஆப்பிள்கள் விலையும் கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 15.8% அதிகரித்துள்ளது. பிப்ரவரி- மார்ச் மாதங்களில் 3% விலை அதிகரித்துள்ளது. மாவு விலையும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14.4% அதிகரித்துள்ளது. பிப்ரவரி- மார்ச் மாதங்களில் 3.2% விலை அதிகரித்துள்ளது.
பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் ரொட்டி, ரோல்ஸ் மற்றும் பன்களின் விலை 1.8 சதவீதம் அதிகரித்துள்ளது. பிப்ரவரியில் இருந்து 2.3 சதவீத வித்தியாசத்துடன் மார்ச் மாதத்தில் தானியங்களின் விலை உயர்ந்துள்ளது.
ஆனால் கீரை வகைகளின் விலை பிப்ரவரி- மார்ச் மாதங்களில் 6.8% சரிவடைந்துள்ளது. ஹாம் விலையும் 3.6% சரிவடைந்துள்ளது.