பெண்கள், சிறுவர்கள் மன ரீதியாக பாதிப்பு; இந்தோனேசியாவில் Grok பயன்படுத்த தடை
இந்தோனேசியாவில் க்ரொக் (Grok) செயற்கை நுண்ணறிவு தளத்தைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்கின் எக்ஸ் சமூக ஊடக தளத்துடன் இணைந்து க்ரொக் செயற்கை நுண்ணறிவு சேவை இயங்கி வருகிறது.

பெண்கள், சிறுவர்கள் மன ரீதியாக பாதிப்பு
செயற்கை நுண்ணறிவு உரையாடல் தளமான க்ரொக், பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றுவது போன்ற செயல்களுக்காக அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் இது சட்டம், கலாசார உணர்வுகளை புண்படுத்துவதாகவும் அந்நாட்டின் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேசமயம் க்ரொக் (Grok) தளத்தை பலர் தவறாக பயன்படுத்துவதால் பெண்கள், சிறுவர்கள் மன ரீதியாக பெரிதும் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டி, இந்தோனேசிய அரசு க்ரொக் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் , க்ரொக் (Grok) செயற்கை நுண்ணறிவு தளத்தை தடை செய்த முதல் நாடாக இந்தோனேசியா விளங்குகிறது.