அமெரிக்காவில் தரைமட்டமான 12 மாடிக் கட்டடம் ; 99 பேர் நிலை என்ன?
அமெரிக்காவின் தென் புளோரிடாவில் உள்ள சிறிய கடற்கரை நகரான மியாமியில் 12 மாடிக் கட்டடம் இடிந்து தரைமட்டமானது. இதில் 100க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது.
ஒருவர் உயிரிழந்த நிலையில் 35 பேர் மீட்கப்பட்டுள்ளனர். சாம்பிளேன் டவர்ஸ் என்ற அந்தக் கட்டடம் இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் மலைபோல் இடிபாடுகளும் மண்ணும் கிடக்கின்றன.
இதில் காணாமல் போன 99 பேர் பட்டியலைத் தயாரித்துள்ள அதிகாரிகள் மீட்பு மற்றும் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை இடிபாடுகளில் சிக்கிய சிறுவன் ஒருவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படும் நிலையில் இரவு முழுவதும் இந்த மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.