1980-களில் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கு – 81 வயது முதியவர் கைது
கனடாவின் ஒட்டாவா நகரில், 1980-ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் நடந்த "வரலாற்றுப் பின்னணி கொண்ட" பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக 81 வயது முதியவர் ஒருவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஒட்டாவாவைச் சேர்ந்த சுல்பிகராலி நஜாக் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். இவர் மீது இரண்டு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
ஒட்டாவா சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த நபரால் மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது இது போன்ற வேறு சம்பவங்கள் நடந்திருக்கலாம் என காவல்துறை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

"இந்த நபர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள், ஒட்டாவா காவல்துறையின் பாலியல் அத்துமீறல் மற்றும் குழந்தைகள் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவை (SACA Unit) 613-236-1222 (எக்ஸ்டென்ஷன்: 5944) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், தங்களின் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாதவர்கள் Crime Stoppers அமைப்பை 1-800-222-8477 (TIPS) என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் தொடர்புகொண்டு ரகசியமாகத் தகவல்களை வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.