மெட்டாவின் திட்டத்திற்கு ஆல்பர்ட்டாவில் எதிர்ப்பு
உலகின் முதனிலை தொழில்நுட்ப நிறுவனமான 'மெட்டா' நிறுவனம் ஆல்பர்ட்டா மாகாணத்தில் பிரம்மாண்ட டேட்டா சென்டர் ஒன்றை அமைக்கவுள்ள திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கணக்கான மக்கள் ஸ்டர்ஜன் கவுண்டி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முகநூலின் தாய் நிறுவனமான மெட்டா, கடந்த மாதம் ஸ்டர்ஜன் கவுண்டியில் உள்ள மொரின்வில் நகரில் ஒரு ஜிகாவாட் திறன் கொண்ட பிரம்மாண்ட டேட்டா சென்டரை அமைக்கவுள்ளதாக அறிவித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் "நிறுவனங்களை ஒழிப்போம்" என முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கின் படத்துடன் "பில்லியனரின் சொத்துக்களை அரவணைத்துடக்குங்கள்" என்ற வாசகம் அடங்கிய பதாகைகளையும் ஏந்திச் சென்றனர். வாகன ஓட்டிகள் ஹார்ன் அடித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
டேட்டா சென்டர்கள் அதிகளவு மின்சாரத்தையும் நீரையும் உறிஞ்சும் தன்மை கொண்டவை என்பதால், தனது தண்ணீர் மற்றும் மின்சாரக் கட்டணம் மேலும் உயரும் என்று உள்ளூர்வாசி ஜெசிகா தோமாஷிரோ கவலை தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சிக்காகக் கட்டப்படும் இத்தகைய மையங்கள் அதிகளவு இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்துவதால் காலநிலை நெருக்கடி தீவிரமடையும் எனப் போராட்டக்காரர்கள் வாதிடுகின்றனர்.