ஒன்றாரியோவில் மோசமான குளிர் தொடர்பில் எச்சரிக்கை
ஒன்றாறியோ மாகாணத்தின் டொரன்டோ மற்றும் டொரன்டோ பெரும்பாக பகுதி என்பனவற்றில் கடுமையான குளிர் நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடிய சுற்றாடல் நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மிக மோசமான குளிருடனான காலநிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினமும் நாளைய தினமும் மறை 30 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உடல் பாகங்கள் தெரியும் வகையில் ஆடைகளை அணிய வேண்டாம் எனவும் முழுமையாக தோல் பகுதியை மறைத்து கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மிக இளவயது குழந்தைகள் வயது மூத்தவர்கள் நாள்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற தரப்பினர் இந்த கடுமையான குளிருடனான காலநிலையினால் ஆபத்துக்களை நேரடியாக எதிர் நோக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் சில நாட்களுக்கு வெப்ப நிலையில் ஏற்ற இறக்கங்களை அவதானிக்க முடியும் என கனேடிய சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.