ரொறன்ரோவை உலுக்கிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உள்ளிட்ட இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மிஸ்ஸிசாகுவா மற்றும் மில்டன் ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இவ்வாறு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் சிலர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதல்களை சம்பவங்களைத் தொடர்ந்து பொலிஸார் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் கைது செய்யப்பட முன்னதாக மேற்கொண்ட துப்பாக்கிச் சூடு காரணமாக குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோட்டார் போக்குவரத்து உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி வழங்கிக் கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து பொலிஸார் துப்பாக்கிதாரி ஒருவர் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
பின்னர் அந்த எச்சரிக்கை வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரும், பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒன்றாரியோ முதல்வர் டக் போர்ட் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பொலிஸாருக்கு நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.