றொரன்டோவில் தொடர் துப்பாக்கிச் சூடு ;அதிருப்தியில் மேயர்
றொரன்டோவில் தொடர் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றமை தொடர்பில் நகர மேயர் ஜோன் டோரி கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

வார இறுதி நாட்களில் றொரன்டோவின் சில இடங்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
ஸ்கொட்டி பேங்க் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியிருந்தது. இந்த சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
சில மணித்தியாலங்களின் பின்னர் புத்தாரஸ்ட் வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள கிங் ஸ்ட்ரீட்டில் அமைந்துள்ள கேளிக்கை விடுதியொன்றில் இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.

இவ்வாறான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் மக்களை பதற்றமடையச் செய்துள்ளதனை தாம் அறிவதாக மேயர் தெரிவித்துள்ளார்.
நகரத்தை பாதுகாக்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது மேயர் டோரி தெரிவித்துள்ளார்.

கடந்த 2021ம் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களினால் காயமடைதல்கள் மற்றும் மரணங்கள் என 163 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        