துப்பாக்கி குண்டுகள் மாயம்; அதிபர் கிம் அதிரடி உத்தரவு!
ராணுவ வீரர்களிடம் இருந்து 600 துப்பாக்கி குண்டுகள் காணாமல் போனதால், வட கொரிய அதிபர் கிம் ஊரடங்கினை அமல்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
வட கொரியாவின் ரியாங்காங் மாகாணத்தில் வடகொரிய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் அப்போது ராணுவவீரர்களிடம் இருந்து 600 க்கும் அதிகமான துப்பாக்கி குண்டுகள் காணாமல் போய் உள்ளது. இந்த விவகாரம் நேரடியாக அதிபர் கிம் பார்வைக்கு சென்றுள்ளது , உடனடியாக தேடுதல் வேட்டையினை இறங்க உத்தரவிட்டுள்ளார் வட கொரிய அதிபர்,பல நாட்களாக தேடியும் அவர்களால் துப்பாக்கி குண்டுகளை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் துப்பாக்கி குண்டுகளை கண்டுபிடிக்கும் வரை ஹைசன் நகரில் முழு ஊரடங்கு அமல்படுத்தபடுவதாக அதிபர் கிம் தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான விசாரணைக்கு அந்த பகுதியில் உள்ள அனைவரும் ஒத்துழைக்குமாறு கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இதை தொடர்ந்து தற்போது அங்கு வீடு வீடாக சென்று அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றதாக தெரியவந்துள்ளது.