இயந்திர கோளாறு; வொஷிங்டனில் அவசரமாக தரையிறக்கப்ட்ட விமானம்
வொஷிங்டனிலிருந்து ஜேர்மனிக்கு புறப்பட்ட போயிங் ட்ரீம்லைனர் (Boeing Dreamliner) விமானம் புறப்பட்ட சிறிதுநேரத்திலேயே மீண்டும் வொஷிங்டனில் தரையிறக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானம் 5000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது இடதுபக்கத்தில் திடீரென்று இயந்திர கோளாறு ஏற்பட்டதாலேயே விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, விமானத்தின் இடதுபக்க இயந்திரம் பழுதானதையடுத்து விமானிகள் MAYDAY எனக் கூறி அவசர உதவி கோரியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இயந்திரம் பழுதானதையடுத்து எரிபொருள் தீரும்வரை விமானம் வானில் சிறிது நேரம் சுற்றிவிட்டு , பின்னர் விமானம் மீண்டும் வொஷிங்டனிலேயே தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.