H-1B கட்டண உயர்வு; அதிபர் டிரம்புக்கு வந்த சிக்கல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், புதிய ஹெச்-1பி (H-1B) விசாவுக்கான கட்டணத்தை ஒரு இலட்சம் டொலராக உயர்த்தியதை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க வர்த்தக சபை (U.S. Chamber of Commerce) கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
டிரம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவு சட்ட விரோதமானது
டிரம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவு சட்ட விரோதமானது (Plainly Unlawful) மற்றும் தவறான கொள்கை என அமெரிக்க வர்த்தக சபை குற்றம் சாட்டியுள்ளது.
ஹெச்-1பி திட்டத்திற்கு அமெரிக்க காங்கிரஸ் (Congress) நிர்ணயித்த கட்டண நடைமுறைகளை இந்த உயர்வு வெளிப்படையாக மீறுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிமக்கள் அல்லாதவர்கள் நுழைவதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இருந்தாலும், அந்த அதிகாரம் நாடாளுமன்றச் சட்டங்களுக்கு நேரடி முரண்பாடாக இருக்க முடியாது என்று வர்த்தக சபை வாதிட்டுள்ளது.
மேலும், இந்த முடிவால் அமெரிக்க நிறுவனங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்றும் அமெரிக்க வர்த்தக சபை (U.S. Chamber of Commerce) சுட்டிக்காட்டியுள்ளது.