அவுஸ்திரேலியாவிலும் பரவியது ‘H5N1’ பறவைக் காய்ச்சல்

Bird Flu Australia World
By Vironika Jun 20, 2026 10:15 AM GMT
Report

அவுஸ்திரேலியாவின் பிரதான நிலப்பரப்பில் முதன்முறையாக கடல் பறவை ஒன்றுக்கு 'H5N1' ரக பறவை காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து, அதன் பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானிஸ் தெரிவித்துள்ளார்.

மேற்கு அவுஸ்திரேலியாவின் தலைநகரான பேர்த்திற்கு தென்கிழக்கே சுமார் 570 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எஸ்பெரன்ஸ் என்ற நகருக்கு அருகில் நோய்வாய்ப்பட்டிருந்த பறவை ஒன்றை பரிசோதித்ததில் இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவிலும் பரவியது ‘H5N1’ பறவைக் காய்ச்சல் | H5N1 Bird Flu Spreads To Australia

இதுவரை உலகிலேயே பறவை காய்ச்சல் தொற்று பரவாத ஒரே கண்டமாக அவுஸ்திரேலியா இருந்து வந்தது.

எனினும், அவுஸ்திரேலிய பிரதான நிலப்பரப்பில் இருந்து சுமார் 4,100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சப்-அண்டார்டிக் தீவான ஹேர்ட் தீவில் கடந்த 2025ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டிருந்தது.

தற்போதைய சூழல் குறித்து சிட்னியில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த பிரதமர் அல்பானிஸ், “இந்த தொற்று நிலைமை கவலையளிக்கிறது. இதன் பரவலைக் கட்டுப்படுத்த எமது அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்” என உறுதியளித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய விவசாயத்துறை அமைச்சர் ஜூலி காலின்ஸ், இந்த வைரஸ் இன்னும் அவுஸ்திரேலியாவின் கோழி வளர்ப்பு அல்லது விவசாயத் துறைகளுக்குள் பரவவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

தற்போதைக்கு பறவைகள் பெருமளவில் உயிரிழந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவும் சாத்தியக்கூறுகள் மிகவும் அரிதானவை என்ற போதிலும், கடந்த சில ஆண்டுகளில் உலகளவில் கோடிக்கணக்கான பறவைகள் இதன் காரணமாக அழிக்கப்பட்டுள்ளன.

இது உலகளாவிய உணவு விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியதுடன், முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையையும் உயர்த்தியிருந்தது.

பறவை காய்ச்சல் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக, அவுஸ்திரேலியா தனது பண்ணைகளில் உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதுடன், பறவைகளுக்கான தடுப்பூசி திட்டங்கள் மற்றும் அவசரகால பாதுகாப்பு திட்டங்களையும் முன்னெடுத்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US