வெளிநாடொன்றில் கொல்லப்பட்ட கனேடியர்: நண்பர் தெரிவித்துள்ள புதிய தகவல்

Canada South Korea
By Balamanuvelan Jun 20, 2026 12:58 PM GMT
Report

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுலா சென்றிருந்த கனேடியர் ஒருவர் கொல்லப்பட்ட விடயம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை என அவரது நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

69 வயதுடைய கனேடியர் ஒருவர் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், புதன்கிழமை மாலை, Kruger தேசிய பூங்கா என்னும் சுற்றுலாத்தலத்துக்குச் சென்றுள்ளார்.

வெளிநாடொன்றில் கொல்லப்பட்ட கனேடியர்: நண்பர் தெரிவித்துள்ள புதிய தகவல் | New Detail On Canadian Shot Death In South Africa

அங்கு, வழிகாட்டி ஒருவர் கையில் துப்பாக்கி வைத்திருக்க, இந்த கனேடியர் அவரிடம் சென்று, அந்த துப்பாக்கி உண்மையான துப்பாக்கியா என்று கேட்டதாகவும், அந்த வழிகாட்டி அந்த துப்பாக்கி உண்மையானதுதான் என்பதை நிரூபிப்பதற்காக, அதை எப்படி இயக்குவது என்று அந்த கனேடியருக்கு செய்துகாட்டும்போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்ததாகவும், துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில், சம்பவ இடத்திலேயே அந்த கனேடியர் உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால், நடந்தது அதுவல்ல என்கிறார் கொல்லப்பட்ட கனேடியரின் நண்பரான Choi என்பவர்.

கனடாவின் வான்கூவரில் வாழ்ந்துவரும், Choiயும், அவரது நண்பரான 69 வயது கனேடியரும், தத்தம் மனைவிகளுடன் ஒரு குழுவாக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்கள்.

அந்தக் குழுவில் 28 பேர் இருந்துள்ளார்கள். அவர்களில் 10 பேர் கனேடியர்கள்.

ஊடகங்களில் வேறு விதமாக செய்திகள் வெளியாகியுள்ளன என்று கூறும் Choi, வழிகாட்டியிடம் சென்று துப்பாக்கி உண்மையானதுதானா என கேட்டது தன் நண்பர் அல்ல, வேறு இரண்டு பேர் என்கிறார்.

தாங்கள் அனைவரும் உயிரியல் பூங்காவில் ஓரிடத்தில் வளர்க்கப்பட்ட தீயைச் சுற்றி அமர்ந்து உணவருந்தியதாகவும், பின் தன் நண்பர் கழிவறை நோக்கிச் சென்றதாகவும் கூறுகிறார் Choi.

பின்னர், அனைவரும் தங்கள் வாகனத்தில் ஏறி தாங்கள் தங்கியிருந்த ஹொட்டலுக்குப் புறப்படலாம் என தயாரானபோதுதான், அவர்களில் ஒருவர் அந்த கனேடியர் இரத்த வெள்ளத்தில் விழுந்துகிடப்பதைக் கண்டதாக தெரிவிக்கிறார் Choi.

உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டதாகவும், ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவிக்கிறார் Choi.

அதாவது, யாரோ இரண்டுபேர் அந்த வழிகாட்டியிடம் துப்பாக்கி குறித்து கேட்க, அவர் அதை கையாளும்போது தவறுதலாக துப்பாக்கி வெடிக்க, Choiயின் நண்பர் மீது குண்டு பாய்ந்துள்ளது.

ஆனால், அவர் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்து அவர் கீழே விழுந்ததை யாரும் கவனிக்கவில்லை. சுமார் அரை மணி நேரம் கழித்துதான் அவர் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், அந்த துப்பாக்கி, யானை அல்லது காண்டாமிருகத்தைக்கூட ஒரே குண்டில் கொல்லும் திறன் கொண்டதாம்.

இதற்கிடையில், Choiயின் நண்பர் சுடப்பட்ட விடயம் தொடர்பில் 38 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US