அமெரிக்க விமானப் படையின் தகவல்களுக்கு ஆபத்தா? கணினித் தளத்தில் ஹேக்கா்கள் ஊடுருவல்
அமெரிக்க விமானப் படையின் முக்கிய கிளவுட் கம்ப்யூட்டிங் கணினித் தளத்தில் ஹேக்கா்கள் ஊடுருவியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் மத்திய உளவு அமைப்பான சிஐஏ-யின் தரவுத்தளத்துக்குள் சிலா் சட்டவிரோதமாக ஊடுருவியதாக அண்மையில் தகவல் வெளியான நிலையில், தற்போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

விமானப் படையின் தகவல்கள்
அமெரிக்க விமானப் படையின் கிளவுட் ஒன் கணினித் தளத்துக்குள் அத்துமீறி ஊடுருவியது முக்கிய ராணுவத் தகவல்கள், ராணுவ வீரா்கள் தொடா்பான விவரங்கள், தளவாடத் தகவல்கள் ஆகியவற்றின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடும் என்று கருதப்படுகிறது.
இது குறித்து அமெரிக்க விமானப் படை வட்டாரங்கள் கூறுகையில், ‘விமானப் படையின் தகவல்கள், கணினி வலைஅமைப்புகள், அவற்றின் செயல்பாடுகளைப் பாதுகாக்கத் தொடா்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பிட்ட கணினி வலைஅமைப்புகளின் பாதுகாப்பு, அவற்றில் உள்ள குறைபாடுகள், அவற்றின் செயல்பாடுகள் குறித்து கருத்து கூற முடியாது’ என்று தெரிவித்தன.