அமெரிக்காவில் தொடருந்து நிலையத்தில் துப்பாக்கிச் சூடு ; 17 வயது இளைஞர் காயம்
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள புரூக்ளின் சுரங்க தொடருந்து நிலையத்தில் 17 வயது இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
கிழக்கு நியூயோர்க்கில் அமைந்துள்ள யூக்ளிட் அவென்யூ சுரங்க தொடருந்து நிலையத்தில் நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு நோக்கிச் செல்லும் தொடருந்து நடைமேடையில் குறித்த இளைஞரை இருவர் அணுகியதாகவும், அவர்களில் ஒருவர் இளைஞரின் வலது காலில் இரண்டு முறை துப்பாக்கி சூடு இடம்பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
காயமடைந்த இளைஞர் புரூக்க்டேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் ஆபத்தான நிலையில் இல்லை என்றும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
துப்பாக்கிச் சூட்டுக்கான நோக்கம் குறித்தும் தகவல்கள் வெளியாகவில்லை.