தென் கொரியா கோர விபத்தில் இரு இலங்கையர்கள் பலி
தென் கொரியாவின் கியோங்கி மாகாணத்தில் உள்ள ஹ்வாசோங் (Hwaseong) நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இலங்கைத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுமார் 30 வயது மதிக்கத்தக்க இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மது பணிகளை முடித்துக்கொண்டு தங்குமிடத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
தென் கொரிய ஊடகங்களின் தகவல்களின்படி, கடந்த நவம்பர் 26 ஆம் திகதி இரவு 9.10 மணியளவில் ஹ்வாசோங்கின் ஜங்கன்-மியோன் (Jangan-myeon) பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
7.5 தொன் எடையுள்ள லொறி ஒன்றின் பின்பகுதியிலுள்ள சரக்கு ஏற்றும் பெட்டியிலிருந்து வெளியே நீட்டிக்கொண்டிருந்த பாகமொன்றில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.