கனடாவில் சலூன் உரிமையாளரின் மோசமான செயல்
கனடாவின் நோர்த் யார்க்கில் உள்ள ஒரு சாலூன் உரிமையாளர் மற்றும் முடி திருத்துநர் மீது இரண்டு பதின்ம வயது சிறுவர்களை பாலியல் முறைகேடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 7ம் திகதி ஒரு ஆண் சிறுவன், பாதர்ஸ்ட் வீதிக்கும் வில்சன் அவென்யூவிற்கும் அருகிலுள்ள "Miss Agot" சாலூனுக்கு முடி திருத்த வருகை தந்தபோது, அங்கு பணியாற்றிய ஹேர்டிரசர் அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மறுநாள், 8ம் திகதி, 60 வயதான ரொலாண்டோ சேஸ் (Rolando Sese) என்பவரை பொலிசார் கைது செய்து, அவர்மீது பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு பதிவு செய்தனர்.
மேலும் விசாரணையின் போது, கடந்த 2023 முதல் ஜனவரி 2025 வரை பல முறை முடி திருத்த வந்த மற்றொரு ஆண் சிறுவன், தொடர்ந்து பாலியல் முறைகேடுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக, மேலும் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் தலையீடு (Sexual Interference) குற்றச்சாட்டுகள் சேஸ்மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதே போன்ற சம்பவங்கள் மற்றவர்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதி, குற்றம் சாட்டப்பட்ட நபரின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
பல ஆண்டுகளாக அவர் நகரத்தின் பல பகுதிகளில் முடி திருத்துநராக பணியாற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.