காசா முனை நிர்வாகத்தை கலைப்பதாக ஹமாஸ் அறிவிப்பு
காசா முனை நிர்வாகத்தை கலைப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
காசா முனை தலைமை நிர்வாகி முகமது அல் பரா தனது பொறுப்பை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

மேலும், காசா நிர்வாக பொறுப்பை ஐநா ஆதரவுபெற்ற அலி ஷாகித் தலைமையிலான தேசிய காசா முனை நிர்வாக குழுவுக்கு வழங்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
மேலும், நிர்வாகம் கலைக்கப்பட்டபோதும் காசா முனையை நிர்வகிக்கும் ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றுவார்கள் என தெரிவித்துள்ளது.
அதேவேளை, காசா முனை நிர்வாகத்தை கலைப்பதாக அறிவித்தபோது ஒப்பந்தத்தின் முதன்மை அம்சமாக திகழும் ஆயுதங்களை கைவிடுவது குறித்து ஹமாஸ் ஆயுதக்குழு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹமாசின் இந்த அறிவிப்பு எந்தவித அர்த்தமும் இல்லாத அறிவிப்பு என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.