ஹமாஸ் உடனடியாக ஆயுதங்களைக் கைவிட வேண்டும்; டிரம்ப் எச்சரிக்கை!
காசா பகுதியில் அமைதி திரும்ப வேண்டுமானால் ஹமாஸ் அமைப்பு உடனடியாக ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் இடையிலான சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை கைவிட மிகக் குறுகிய கால அவகாசம் மட்டுமே வழங்கப்படுகிறது.
அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால், அது அவர்களுக்கு மிகவும் ஆபத்தானது என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் மாத தாக்குதல்களுக்குப் பின்னர் ஈரான் தனது ஆயுதங்களை மீண்டும் உருவாக்கி வருவதாக தகவல்கள் வந்துள்ளதாக அவர் கூறினார்.
இந்நிலையில் ஈரான் மீண்டும் ஆயுதங்களை உற்பத்தி செய்தால் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தும் என்பதையும் அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின் போது, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இஸ்ரேலின் மிக உயர்ந்த குடிமகன் விருதான இஸ்ரேல் பரிசை ட்ரம்பிற்கு வழங்குவதாக அறிவித்தார்,
அதேவேளை இது இஸ்ரேலியர் அல்லாத ஒருவருக்கு வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுகுறிப்பிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.