ஆப்கான் ஏதிலிகளை நெகிழச் செய்த கனேடிய பிரதமர்
கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, ஹமில்டனில் குடியேற்றப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் ஏதிலிகளை சந்தித்துள்ளார்.
சுமார் 400 ஆப்கானிஸ்தான் ஏதிலிகளுக்கு இவ்வாறு புகலிடம் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் ட்ரூடோ மற்றும் அவரது புதல்வர் சேவியர் ஆகியோர் ஏதிலிகளை சந்தித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் ஏதிலியான அஹமட் நிஜாப் வாஹிதி அவரது மனைவி மார்காஹான மற்றம் 14 வயதான மகள் ஹாரீர் ஆகியோருடன் பிரதமர் கலந்துரையாடியுள்ளார்.
மிகவும் நெருக்கடியான வாழ்க்கையை ஆப்கானிஸ்தானில் வாழ்ந்ததாகவும், புகலிடம் வழங்கியமைக்கான நன்றி பாராட்டுவதாகவும் வாஹிதி தெரிவித்துள்ளார்.
இவ்வாறான குடும்பங்கள் மூலம் கனடா நன்மைகளை அடைந்துள்ளதாகவும், வலுவான சமூகத்தை கட்டியெழுப்ப முடிவதாகவும் பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கனடாவில் குடியேறுவதற்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பம் மிகவும் மகிழ்ச்சிக்குரியது எனவும் நன்றி பாராட்டுவதாகவும் ஆப்கானிஸ்தான் பிரஜைகள் மனம் நெகிழ்ந்து பிரதமர் ட்ரூடோவிடம் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.