தூங்கும் பெண்களின் கால்களை தடவி தொல்லை ; அமெரிக்காவில் புதுவகை குற்றசாட்டு !
அமெரிக்கவில், மார்க் ஆன்டனி கோன்ஸாலஸ் (26) என்பவர் ஒரு புது வகையான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அமெரிக்காவின் நிவேடா மாநிலத்தில் உள்ளது ஸ்டேட்லைன் ரிசார்ட் எனும் குடியிருப்பு பகுதிகளில் அதிகாலை நேரங்களில் பூட்டப்படாத 2 தனித்தனி குடியிருப்புகளுக்குள் மார்க் புகுந்திருக்கிறார்.
உள்ளங் கால்களை தடவி சில்மிசம்
அங்கு உறங்கி கொண்டிருக்கும் பெண்ணின் கால்கள் அருகே அமர்ந்து பெண்ணின் உள்ளங்கால்களை நீண்ட நேரம் தடவினார். கால்களை ஏதோ உரசுவது போன்ற உணர்வில் அப்பெண் உறக்கம் கலைந்து எழுந்தார். கட்டிலுக்கருகே ஒருவன் அமர்ந்திருப்பதை கண்ட அப்பெண் திடுக்கிட்டு கூக்குரலிட்டார். உடனே மார்க் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதேபோன்று அதே குடியிருப்பு பகுதியில் உள்ள மற்றொரு பெண் வீட்டிலும் நுழைந்து மார்க், இவ்வாறு நடந்து கொண்டார். அதேவேளை மார்க் பல குற்றங்களுக்காக கலிபோர்னியா காவல்துறையால் முன்பே அறியப்பட்டவர்.
அவர் மீது பெண்கள் காலணி திருட்டு, அத்துமீறி உள்ளே நுழைந்து பாலியல் ஆசைகளை முறையற்ற வழியில் தீர்க்க முற்படுதல் போன்ற பல குற்றச்சாட்டுக்கள் உள்ளது.
அவரின் குற்ற செயல்கள் அதிகரித்ததனையடுத்து மார்க் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து மெர்செட் கவுன்டி சிறையில் அடைக்கப்பட்டார்.
அங்கிருந்து அவர் நிவேடா மாநில டக்ளஸ் கவுன்டி காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார்.
"இதுபோன்ற குற்றங்கள் சமூகத்திற்கு ஆபத்தானவை. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டால்தான் பொதுமக்கள் நிம்மதியாக வாழ முடியும்," என இச்சம்பவம் குறித்து டக்ளஸ் கவுன்டி ஷெரீப் டான் கவர்லி கூறினார்.