தாயார் டயானாவிடம் இருந்து ஹரிக்கு கிடைத்த செய்தி!
தாயார் டயானா இறந்தபின்னர், ஆவிகளுடன் பேசும் ஒரு பெண்ணின் உதவியை தான் நாடியதாக இளவரசர் ஹரி கூறியுள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹரி வெளியிட இருக்கும் வாழ்க்கை வரலாறு புத்தகம் முன்கூட்டியே ஸ்பெயின் மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.
அவர் வெளியிடவுள்ள அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியாகிவருகின்றன.
அதில், தன் தாயார் டயானா இறந்தபின்னர், ஆவிகளுடன் பேசும் ஒரு பெண்ணின் உதவியை தான் நாடியதாக அந்த புத்தகத்தில் ஹரி குறிப்பிட்டுள்ளார் .
அந்தப் பெண் டயானாவிடமிருந்து கிடைத்த ஒரு செய்தியை ஹரிக்கு தெரிவித்துள்ளார்.
உங்கள் தாய் டயானாவால் வாழமுடியாத ஒரு வாழ்க்கையை நீங்கள் வாழ்கிறீர்கள் என ஹரியிடம் கூறிய அந்தப் பெண், நீங்கள் எப்படி வாழவேண்டும் என உங்கள் தாய் டயானா விரும்பினாரோ, அந்த வாழ்க்கையைத்தான் நீங்கள் வாழ்கிறீர்கள் என்றும் கூறினாராம்.
அதேவேளை இளவரசர் ஹரி வெளியிட இருக்கும் வாழ்க்கை வரலாறு புத்தகம் தொடர்பில் ஏற்கனவே சர்சைகள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது