ட்ரம்ப்க்கு பணியாத ஹார்வர்ட் பல்கலைகழகம் ; முன்னாள் ஜனாதிபதி ஒபாமா வாழ்த்து
அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், மாணவர் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தாத நிலைப்பாட்டிற்காக ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா பாராட்டி உள்ளார்.
உலக புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலை வளாகத்தில் மாணவர்கள் போராட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது என, டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது.
இதனை ஏற்க மறுத்ததால் பல்கலைக்கான, 2.2 பில்லியன் டாலர் மானியங்களை டிரம்ப் நிர்வாகம் அதிரடியாக நிறுத்தி உள்ளது.
இந்நிலையில், டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், மாணவர் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தாத நிலைப்பாட்டிற்காக ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை ஒபாமா பாராட்டி உள்ளார்.
கல்வி சுதந்திரத்தை நசுக்கும் சட்டவிரோத முயற்சியை நிராகரித்து, ஹார்வர்ட் பல்கலை மற்ற உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது. மற்ற நிறுவனங்களும் இதைப் பின்பற்றும் என்று நம்புவோம். என ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.