கனடாவில் சைக்கிளோட்டிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவில் சைக்கிகள் அதிகளவில் களவாடப்படுவதாக சைக்கிளோட்டிகளுக்கு எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது.
இளம் தலைமுறையினர் அதிகளவில் சைக்கிளோட்டத்தில் நாட்டம் காட்டி வருவதாகவும், சைக்கிள் என்பது தற்போது ஒரு பரவலான பயண முறையாக மாறியுள்ளது என ஹாலிபெக்ஸ் துனை மேயர் மேன்சினி தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், சைக்கிள் பயன்பாடு அதிகரிப்பதனுடன், சைக்கிள் திருட்டும் நகரங்களில் அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கனடாவின் டொரோண்டோவில் கடந்த ஆண்டு சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட சைக்கிள்கள் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பபடுகின்றது.
சைக்கிள்களுடன் பாதுகாப்பாக பூட்டை கொள்வனவு செய்ய வேண்டுமெனவும் பாதுகாப்பான இடங்களில் சைக்கிள்களை நிறுத்தி வைக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.