அடுத்தடுத்து தாக்கப்படும் அமெரிக்க தூதரகங்கள் ; அதிரும் மத்திய கிழக்கு
துபாயில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் தூதரகத்தின் ஒரு பகுதி தீப்பற்றிக் கொண்டது. எனினும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரான் மீதான அமெரிக்கா- இஸ்ரேலின் கூட்டு தாக்குதலைத் தொடர்ந்து அந்நாடு அண்டை நாடுகளான வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

துபாயில் அமெரிக்க துணைத் தூதரகம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் தூதரக வளாகத்தில் சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது.
அங்கிருந்த அமெரிக்க தூதரக அதிகாரிகள், ஊழியர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். தீ விபத்து கட்டுப்படுத்தப்பட்டது என துபாய் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மீட்புக்குழுக்கள் உடனடியாக செயல்பட்டன. யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.