நியூயோர்க் டைம்ஸ் சதுக்கத்தில் துப்பாக்கிச் சூடு ; 17 வயது இளைஞர் கைது
நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் நேற்று பிற்பகல் சுமார் 3:40 மணியளவில் பல துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக கீழ் மன்ஹாட்டனின் தெருக்களில் என்.பி.ஏ சாம்பியனான நியூயார்க் நிக்ஸ் அணியின் வெற்றியைக் கொண்டாடும் அணிவகுப்பு நிகழ்ச்சியில் மக்கள் கூடியிருந்தனர்.

இந்த நிகழ்விற்காக சுமார் 10,000 பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில் அங்கு திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதுடன் மக்கள் கூச்சலிட்டு, பாதுகாப்பிற்காக ஆங்காங்கே ஓடியுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டவரை பொலிஸார் துரத்திப் பிடித்ததுடன் மேலும் இத்துப்பாக்கிச் சூடு நடத்திய 17 வயது இளைஞரைபொலிஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து விரிவான தகவல்கள் எதுவும் அதிகாரிகளிடம் இருந்து தெரிவிக்கப்படவில்லை.