உலகக் கிண்ணத் தொடரில் சுவிட்சர்லாந்து அணி அபார வெற்றி
2026 உலகக் கிண்ணத் தொடரில் நடைபெற்ற போட்டியில் சுவிட்சர்லாந்து அணி 4 - 1 என்ற கோல் கணக்கில் பொஸ்னியாவை வீழ்த்தி அபார வெற்றி ஈட்டியுள்ளது.
இந்நிலையில்,ஆட்டத்தின் முதல் பாதியில் சுவிட்சர்லாந்து அணி 68 விகிதம் பந்தை தன் வசம் வைத்திருந்து செலுத்திய போதிலும், பொஸ்னியா அணியின் பலமான தற்காப்பு ஆட்டத்தால் முதல் பாதி,சமநிலையில் முடிந்தது.

தொடர்ந்து,73ஆவது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் ஜோஹன் மன்சாம்பி முதல் கோலை அடித்தார். 78ஆவது நிமிடத்தில் பொஸ்னியா வீரர் தாரிக் முஹாரெமோவிக் சிவப்பு அட்டை பெற்று வெளியேறியதால் பொஸ்னியா அணி 10 வீரர்களாகக் குறைந்தது.
எனவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சுவிட்சர்லாந்தின் ரூபன் வர்காஸ் 84 ஆவது நிமிடத்திலும், மன்சாம்பி தனது 2ஆவது கோலையும் அடித்து வெற்றியை உறுதி செய்தனர். இந்நிலையில்,அதிக நேரத்தில் பொஸ்னியாவின் எர்மின் மாஹ்மிக் ஒரு கோல் அடித்தார்.
அடுத்த சில நிமிடங்களிலேயே சுவிட்சர்லாந்தின் கிரானிட் சாகா பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றி, அணியின் 4-1 என்ற வெற்றியை தன்வசப்படுத்தினர்.