ஈரான் போர்: எரிபொருள் தொடர்பில் கனடாவின் உதவியை நாடும் நாடுகள்

Canada Israel-Iran conflict
By Balamanuvelan Mar 04, 2026 06:12 AM GMT
Report

ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல், அதற்கு ஈரான் கொடுத்துவரும் பதிலடியால், எதிர்பார்த்ததுபோலவே கச்சா எண்ணெய், எரிபொருள் விடயத்தில் பிரச்சினை உருவாகியுள்ளது.

பொதுவாகவே, போர் தொடங்கினால், அந்தப் போர் நேரடியாக போரில் சம்பந்தப்பட்டுள்ள நாடுகளை மட்டுமின்றி மற்ற நாடுகளையும் பாதிக்கும். குறிப்பாக, எண்ணெய் விலை உயரும். அப்படியிருக்கும்போது, மத்திய கிழக்கு பகுதியில் உருவாகியுள்ள மோதல் எண்ணெய் மற்றும் எரிபொருள் விலையை எந்த அளவுக்கு பாதிக்கும்!

அதாவது, உலகின் மொத்த எண்ணெயில் 20 சதவிகிதம் ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாகத்தான் கொண்டுவரப்படுகிறது. 

ஈரான் போர்: எரிபொருள் தொடர்பில் கனடாவின் உதவியை நாடும் நாடுகள் | Nations Seeking Energy Help From Canada Amid War

இந்த ஹோர்மூஸ் ஜலசந்தி, ஈரான் மற்றும் ஓமான் நீர்ப்பரப்பில் அமைந்துள்ளது.

ஆக, ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்ந்து, ஹோர்மூஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளதுடன், ஏதாவது கப்பல் அந்த பகுதிக்குள் நுழைந்தால் அதை தீவைத்துக் கொளுத்திவிடுவோம் என்றும் எச்சரித்துள்ளது.

ஆக, ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் மற்றும் எரிவாயு கொண்டு செல்லப்படும் கப்பல்கள் அனுமதிக்கப்படவில்லை என்றால், ஓரிரு நாட்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.

ஆனால், அதுவே ஐந்து நாட்கள், ஒரு வாரம் என நீடித்தால், ஹோர்மூஸ் ஜலசந்தியின் இருபக்கங்களிலும் கப்பல்கள் காத்து நிற்க, உண்மையாகவே அது உலகின் பொருளாதாரத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தத் துவங்கும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.

இப்படிப்பட்ட ஒரு சூழலில், எண்ணெய் மற்றும் எரிபொருளுக்காக கனடாவின் உதவியை சில நாடுகள் நாடியுள்ளதாக கனடாவின் எரிசக்தித்துறை அமைச்சரான டிம் (Tim Hodgson) தெரிவித்துள்ளார். 

ஈரான் போர்: எரிபொருள் தொடர்பில் கனடாவின் உதவியை நாடும் நாடுகள் | Nations Seeking Energy Help From Canada Amid War

ஈரான் போரால் ஏற்பட்டுவரும் எண்ணெய் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய, கனடாவால் உதவ முடியுமா என்று கேட்டு பல்வேறு நாடுகளிலிருந்து தனக்கு தொலைபேசி அழைப்புகள் வந்துகொண்டிருப்பதாக டிம் தெரிவித்துள்ளார்.

மேலும், திடீரென இப்படி ஒரு கோரிக்கை வந்துள்ளதால், அதற்கு பதிலளிக்க கனேடிய எண்ணெய் மற்றும் எரிபொருள் உற்பத்தியாளர்களுக்கு சிறிது கால அவகாசம் தேவை என்று கூறியுள்ள அவர், திடீரென எண்ணெய் அல்லது எரிபொருள் தயாரிப்பை அதிகரிக்க இயலாது என்கிறார்.

கனடா, குறிப்பாக, கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம் எண்ணெய் வளம் மிக்க மாகாணம் என்பதை பலரும் அறிந்திருக்கக் கூடும்.

உலகிலேயே அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடுகளில், கனடா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள நாடு என அழைக்கப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US