ஷேக் ஹசீனாவின் தங்கை மகளுக்கு ஈராண்டு சிறை தண்டனை
பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் துணை நிதியமைச்சருமான டுலிப் சித்திக் (Tulip Siddiq) ஊழல் புரிந்ததாகப் பங்களாதேஷ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டுலிப் சித்திக் (Tulip Siddiq) பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் (Sheikh Hasina) தங்கை மகள் ஆவார். டுலிப்புக்கு ஈராண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

தாயாரும் , ஷேக் ஹசீனாவும் சம்பந்தப்பட்டிருந்தனர்
அரசாங்கத்துக்குச் சொந்தமான நிலத்தைத் தம் குடும்பத்திற்கு ஒதுக்கச் சொல்லி முன்னாள் பிரதமரைத் தூண்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
குற்றத்தில் அவருடைய தாயாரும் ஷேக் ஹசீனாவும் சம்பந்தப்பட்டிருந்தனர் என்று கூறப்பட்டது.
தாயாருக்கு 7 ஆண்டுச் சிறைத்தண்டனையும் ஷேக் ஹசீனாவுக்கு 5 ஆண்டுச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டன.
குற்றச்சாட்டை முற்றிலும் நிராகரிப்பதாக டுலிப் கூறியுள்ள நிலையில் அவர் தண்டனையை நிறைவேற்றுவாரா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.