மொடர்னாவின் புதிய கோவிட் தடுப்பூசிக்கு அனுமதி
மொடர்னா நிறுவனத்தின் புதிய கோவிட்19 தடுப்பூசிக்கு கனடிய சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கியள்ளது.
புதிய திரிபுகளுக்கு பயன்படுத்தப்படக்கூடிய இற்றைப்படுத்தப்பட்ட மொடர்னா தடுப்பூசி இவ்வாறு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வைரஸ் தொற்றுக்காக பயன்படுத்தப்படும் புதிய தடுப்பூசிகள் விரைவில் கனடாவிற்கு தருவிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒமிக்ரோன் திரிபின் கேபீ.2 உப திரிபினை குணப்படுத்தக் கூடிய புதிய வகை தடுப்பூசிகளை மொடர்னா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஆண்டு கோடை காலத்தில் பயன்படுத்துவதற்கு போதியளவு கோவிட் தடுப்பூசிகள் திரட்டப்பட்டு வருவதாக கனடிய சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, நோவாவெக்ஸ் மற்றும் பைசர் ஆகிய தடுப்பூசிகளின் புதிய மேம்படுத்தப்பட்ட தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும் என கனடிய சுகாதார திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.