கனடாவில் ராபீஸ் தடுப்பு ஊசிகளுக்கு தட்டுப்பாடு
கனடாவில் ராபிஸ் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அதனை நிவர்த்தி செய்வதற்காக கூடுதல் எண்ணிக்கையில் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கனடிய சுகாதார முகவர் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த மாத இறுதிக்குள் ராபிஸ் தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே இந்த தடுப்பூசிகள் இறக்குமதி செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீர் வெறுப்பு நோயினால் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலானவர்கள் இந்த தடுப்பூசி ஏற்றிக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தடுப்பூசி பிரான்சில் உற்பத்தி செய்யப்பட்டு கனடாவிற்கு தருவிக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.