பாலஸ்தீனியர்களுக்கு முட்டுகட்டை நிலை ; வீதியை மூடிய இஸ்ரேல்
ஹமாஸ் அமைப்பு யுத்தநிறுத்த உடன்படிக்கையை மீறியதாக தெரிவித்து இஸ்ரேல் முக்கிய வீதியொன்றை மூடியுள்ளதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் காசா பள்ளத்தாக்கில் உள்ள தங்கள் பகுதிகளிற்கு வரமுடியாத நிலையேற்பட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பு நான்கு இஸ்ரேலிய இராணுவவீராங்கனைகளையும் இஸ்ரேல் 200 பாலஸ்தீனியர்களையும் விடுதலை செய்துள்ள நிலையிலேயே இந்த முட்டுகட்டை நிலை எழுந்துள்ளது.
வடபகுதிக்கு அனுமதிக்கப்போவதில்லை
ஆர்பெல் யெகுட் என்ற இஸ்ரேலிய பெண்ணை விடுதலை செய்வது குறித்த திட்டத்தினை ஹமாஸ் வெளியிடும் வரை பாலஸ்தீனியர்கள் காசாவின் வடபகுதிக்கு செல்வதற்கு அனுமதிக்கப்போவதில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஆர்பெல் யெகுட் உயிருடன் இருக்கின்றார் அவர் விடுதலை செய்யபப்படுவார் என ஹமாஸ் தெரிவித்துள்ளது. ஆர்பெல் யாகுட் 2023 ஒக்டோபர் 7ம் திகதி ஹமாசினால் பணயக்கைதியாக பிடிக்கப்பட்டார்.
கிபுட்ஸ் நிர் ஒஸ்ஸில் மேற்கொண்ட தாக்குதலின் போது ஹமாஸ் இவரை பணயக்கைதியாக பிடித்திருந்தது.இந்த தாக்குதலின் போது அவரது சகோதாரர் கொல்லப்பட்டார்.
இந்த யுவதியின் ஆண்நண்பர் மற்றும் உறவினர்களும் கடத்தப்பட்டனர், அவர்களில் சிலர் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர்.