டொரொன்டோவில் அதிக வெப்பம் குறித்து எச்சரிக்கை
டொரொன்டோ நகரம் மற்றும் தெற்கு ஒண்டாரியோ மாகாணத்தின் பெரும்பாக பகுதிகளில் தொடர்ச்சியான பல தினங்களுக்கு வெப்பநிலை நீடிக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டளளது.
கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த வெப்பநிலை அதிகரிப்பு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த வெப்ப அலை ஞாயிற்றுக்கிழமையன்று தொடங்கி செவ்வாய்க்கிழமை வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டொரொன்டோவில் பகல் நேர வெப்பநிலை 30°C - 34°C வரை உயர வாய்ப்பு உள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.
ஈரப்பதம் காரணமாக உணரப்படும் வெப்பநிலை (humidex) 36°C - 42°C வரை இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இரவு நேரத்திலும் வெப்பம் குறைவாகவே இருக்கும் எனவும் 19°C - 23°C வரை மட்டுமே குளிர்ச்சி ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை தான் மிகக் கடும் வெப்பநிலை பதிவாகும் என தேசிய வானிலைத் துறை எச்சரிக்கை செய்துள்ளது.
கடும் வெப்பநிலை நீடிக்கும் காலம் ஒவ்வொரு பகுதிக்கும் மாறுபடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.