மீண்டும் இயங்கத் தொடங்கியது ஹீத்ரோ விமான நிலையம்
பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையத்தின் பணிகள் கட்டம் கட்டமாக வழமைக்குக் கொண்டு வரப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஹீத்ரோ விமான நிலையத்திற்கு அருகிலுள்ள துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக விமான நிலையத்திற்கான மின்சார விநியோகம் தடைப்பட்டது.
ஹீத்ரோ விமான நிலையம்
இதன் காரணமாக பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையம் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக நேற்று (21) அறிவிக்கப்பட்டது.
அத்துடன் கொழும்புக்கும் லண்டனுக்கும் இடையே நேற்று (21) இயக்கப்படவிருந்த இரண்டு சேவைகளையும் இரத்து செய்வதற்கு ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்தநிலையில், சில விமானங்கள் தற்போது ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறக்கப்படுவதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய தினத்துக்குள் விமான நிலையத்தின் பணிகளை முழுமையாக வழமைக்கு கொண்டு வர முடியும் என அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.