எகிறிய வெப்ப அலை... மின்வெட்டால் மில்லியன் கணக்கானோர் பாதிப்பு
சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் உள்ள மில்லியன் கணக்கான குடியிருப்பாளர்கள் கடுமையான வெப்ப அலை மற்றும் வறட்சிக்கு மத்தியில் தொடர் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலில், சுமார் 5.4 மில்லியன் மக்கள் வசிக்கும் Dazhou நகரில், மின்தடை மூன்று மணி நேரம் வரை நீடிக்கிறது என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், மாகாணத்தில் உள்ள தொழிற்சாலைகள், வீடுகளுக்கு மின் விநியோகத்தை திருப்பி விடுவதற்கான அவசர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக உற்பத்தியை குறைக்க அல்லது வேலையை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
இதனிடையே, நீர்மின் நீர்த்தேக்கங்கள் தற்போது பாதியளவு வறண்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சமீப நாட்களாக சிச்சுவான் மற்றும் அண்டை மாகாணங்களில் வெப்பநிலை 40C ஐ தாண்டியுள்ளது.
இதன் விளைவாக, அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் ஏர் கண்டிஷனிங்கிற்கான மின்சார தேவை அதிகரித்தது, து மின் நிறுவனங்களை கடும் அழுத்தத்திற்கு உள்ளாக்கியது என கூறப்படுகிறது.