ரஷ்யாவின் இராணுவ தந்திரங்கள் மீது கடும் விமர்சனம்!
புடின்(Vladimir Putin) ஆதரவு விமர்சகர்கள் தற்போது ரஷ்யாவின் இராணுவ தந்திரோபாயங்கள் குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது ரஷ்யப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் பல நகரங்களின் அதிகாரம் உக்ரேனியப் படைகளின் கைகளுக்குத் மீளவும் திரும்பியுள்ளது.
சமீபத்தில், ரஷ்ய இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட மூலோபாய நகரமான லைமனை மீண்டும் கைப்பற்றுவதில் உக்ரைன் படைகள் வெற்றி பெற்றன.
இது ரஷ்ய இராணுவத்திற்கு குறிப்பிடத்தக்க பின்னடைவு என இராணுவ ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆயிரக்கணக்கான உக்ரைன் ராணுவ வீரர்கள் லைமன் நகரை சுற்றி வளைத்த பின்னணியில் ரஷ்ய ராணுவம் தப்பியோடியதாக சில வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ரஷ்ய ராணுவத்திடம் இருந்து நகரம் முழுமையாக விடுவிக்கப்பட்டதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஸ்லென்ஸ்கி(Volodymyr Zelenskyy) அறிவித்தார். ரஷ்யாவின் கீழ் உள்ள டொனெட்ஸ்க் பகுதியில் லைமன் நகரம் அமைந்திருப்பதும் சிறப்பு ஆகும்.